பைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிடாதீர்கள்: விஷ்ணு ஆவேசம்
சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு, நடிகை அமலாபாலை திருமணம் செய்யவுள்ளதாக ஒருசில இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியது.
இந்த செய்திகளை பார்த்து ஆவேசமான நடிகர் விஷ்ணு, ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான செய்தியை வெளியிட வேண்டாம் என்றும், ஊடகங்கள் பொருப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் ‘நாங்களும் மனிதர்கள்தான் எங்களுக்கும் குடும்பம் உள்ளது என்றும் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்க வேண்டாம் என்றும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிய ‘ராட்சசன்’ திரைப்படத்தில் விஷ்ணு, அமலாபால் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு, அமலாபால், திருமணம், ஊடகங்கள்