பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் எத்தனை? அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் எத்தனை? அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்லவுள்ள நிலையில் தென் தமிழகத்திற்கு செல்ல வேண்டிய ரயில்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு முடிந்துவிட்டது

இந்த நிலையில் பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

குறிப்பாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14,263 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், ஜனவரி 9-ம் தேதி சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும், இந்த ஆண்டு 6 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply