அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவெடுப்பார் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை, அதிமுக பொதுக்குழு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதிக்கே அனுப்புவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு தலைமை நீதிபதியிடம் மனு அளித்து இருந்தது.