வாக்காளர்கள் பேரம் பேசி ஓட்டுக்கு பணம் வாங்குகின்றனர் என்றும், பொதுமக்களே ஊழல்வாதியாக மாறிவிட்டனர் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வருமான வரித்துறைக்கு தெரிந்தே, அரசியல் கட்சிக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஒரு தொகுதிக்கு ரூ.50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றனர் என நீதிபதிகள் தங்கள் வேதனையை தெரிவித்தனர்.