பொன் மாணிக்கவேல் ஓய்வு, சிலைக்கடத்தல் தீர்ப்பு: இரண்டும் ஒரே நாளில்…!

பொன் மாணிக்கவேல் ஓய்வு, சிலைக்கடத்தல் தீர்ப்பு: இரண்டும் ஒரே நாளில்…!

தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிலை கடத்தலில் உள்ள மர்மங்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.

பொன்மாணிக்கவேல் இந்த வழக்கை நடத்துவதற்கு பதிலாக சிபிஐ நடத்தும் என்ற தமிழக அரசு உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் இதுகுறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

இன்று ஒரே நாளில் பொன்மாணிக்கவேல் ஓய்வு மற்றும் சிலைக்கடத்தல் வழக்கின் தீர்ப்பும் வெளிவருவது தற்செயலாக அமைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய
தீர்ப்பில் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நீதிமன்றம் உத்தரவிட்டு பொன்மாணிக்கவேல் அவர்கள் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply