பொன் மாணிக்கவேல் பதவிக்கு புதிய அதிகாரி நியமனம்
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறுவதை அடுத்து அவருடைய பதவிக்கு அபய்குமார் சிங் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. இந்த தீர்ப்பில் பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு பணிக்காலம் நீட்டித்து உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் புதிய அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு புதிய ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ள அபய்குமார் சிங் இதற்கு முன்னர் தமிழ்நாடு காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.