பொம்மைக்கு பூசணிக்காய் உடைச்சாச்சு: எஸ்.ஜே.சூர்யா டுவீட்

பொம்மைக்கு பூசணிக்காய் உடைச்சாச்சு: எஸ்.ஜே.சூர்யா டுவீட்

எஸ்.ஜே.சூர்யா நடித்து வந்த ‘பொம்மை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் ’பொம்மை படத்தின் படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைச்சாச்சு’ எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் ஆடியோ குறித்த தேதிகள் விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் ராதாமோகன் அவர்களுடன் செய்த பயணம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

எஸ்ஜே சூர்யா ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படப்பிடிப்பின் இடையே நடந்து வந்ததால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது

Leave a Reply