பொருளாதார நோபல் பரிசு: முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரங்கராஜனுக்கு ஏமாற்றம்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு முன்னால் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் அவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஹெச். தாலர் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ரங்கராஜன் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசின் 6 பேர் பட்டியலில் ரங்கராஜன் பெயர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட், கடந்த 1945ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். 72 வயதான இவர் அமெரிக்காவில் பொருளாதார பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.