பொருள் புதுசு: பயண தலையணை

பொருள் புதுசு: பயண தலையணை

பயணத்தில் பயன்படுத்தும் தலையணையையே புதுமையாக உருவாக்கியுள்ளனர். இயந்திரத்தில் சலவை செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இதில், போன் வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

வீடியோ தொடுதல்

பார்க்கவும் கேட்கவுமான வீடியோ கான்பரன்ஸ் வசதியில், தொடுதல் உணர்வும் கிடைத்தால் எப்படியிருக்கும் என்கிற ஆராய்ச்சியின் விளைவாக ஒரு கிளவுஸை கண்டுபிடித்துள்ளனர் கனடாவை சேர்ந்த சிமோன் பிராசெர் பல்கலைக்கழகத்தில். வைஃபை இணைப்பில் இயங்கும் இந்த கிளவுஸை வீடியோ கான்பரன்ஸின்போது கைகளில் மாட்டிக் கொள்ள வேண்டும். எதிரிலிருப்பவர் தன் கையில் மாட்டியுள்ள கிளவுஸில் அழுத்தம் கொடுத்தால் மறுமுனையில் இருப்பவருக்கு தொடுதல் உணர்வு கிடைக்கும்.

ஹைப்பர்லூப் பாதை

பயணத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை அமைப்பதற்காக ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்துடன் துபாய் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் இதன் முதற்கட்ட சோதனை ஓட்டத்துக்கான பாதை அமெரிக்காவின் வடக்கு லாஸ் வேகாஸ் மாகாணத்தின் நெவடா பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 500 மீட்டருக்கு இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. டெவலெப்மெண்ட் ஹைப்பர்லூப் என்பதன் சுருக்கமாக டேவ் லூப் என்று இதற்கு பெயரிட்டுள்ளனர்.

உறுதியான ஸ்கேல்

வடிவமைப்பாளர்களுக்கு அத்தியாவசியமான ஸ்கேலை விமானத்துக்கு பயன்படுத்தும் அலுமினியத்தின் தரத்தில் உருவாக்கியுள்ளனர். அளவுகள் துல்லியமாகவும், வலுவாகவும் இருக்கும். பல பயன்களைக் கொண்டுள்ளது.

பாதி கீ போர்ட்

நீளமான கணினி கீ போர்டு சில பணிகளுக்கு இடையூறாக இருக்கலாம். ஆனால் அதை பகுதியாக பிரித்து பயன்படுத்தும் விதமாக உருவாக்கியுள்ளனர். தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும் செய்யலாம்.

Leave a Reply