பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 இலவச உதவி மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 இலவச உதவி மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த 42 உதவி மையங்களில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நேரில் சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இலவச மையங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி ஆன்லைன் பதிவு துவங்குகிறது என ஏற்கனவே தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply