பொறுப்பில்லாத ஆழ்துளை கிணறு ஓனர்கள்: தூக்கி ஜெயிலில் போடுங்க
ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு ஆழ்துளை கிணறு தோண்டும் அந்த கிணற்றின் ஓனர்கள், அதை மூடி வைக்க ஒரு ஐம்பது ரூபாய் செலவு செய்யாததால் பல உயிர்கள் வீணாகிக் கொண்டிருக்கின்றன,
ஒரு ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு உரிய விதிகள் இன்னும் சரியாக அரசு வகுக்கப்படாததுதான் இது மாதிரியான விளைவுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன
மணப்பாறை அருகே இரண்டு வயது சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து கடந்த 15 மணி நேரத்திற்கு மேலாக தத்தளித்து வருகிறது. அந்த குழந்தையை உயிருடன் மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். பல்வேறு முயற்சிகள் செய்தும் இன்னும் அந்த குழந்தையை மீட்க முடியவில்லை
இருப்பினும் அந்த குழந்தை தற்போது வரை உயிரோடு இருக்கிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி. எப்படியும் அந்த குழந்தையை உயிருடன் மீட்டு விட வேண்டும் என்று போராடி வரும் மீட்புப் படையினர்களுக்கு பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து குழந்தையை மீட்க தேவையான நடவடிக்கை அனைத்தையும் எடுத்து வருகின்றனர்
இந்த நிலையில் ஆள்துளை கிணறு தோண்டும் ஒவ்வொருவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணரவேண்டும். கிணறு தோண்ட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தால் மட்டும் போதாது, அந்தக் கிணற்றைத் தோண்டி முடிந்தவுடன் அதை சரியான முறையில் மூடுவதற்கு தேவையான வழி முறைகளை செய்ய வேண்டும். ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை விழுந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் எவ்வளவு என்பதை அவர்கள் சற்று யோசிக்க வேண்டும்
அரசு எந்திரங்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான நபர்கள் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டால் அந்த அதற்காக பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. பொறுப்பில்லாமல் ஒரு நூறு ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணற்றை மூடாமல் இருந்ததன் விளைவு எவ்வளவு பெரிய வேலைகள் இருக்கிறது என்பதை உணரவேண்டும்
ஆள்துளை கிணற்றை மூடாமல் போனதால் குழந்தைகள் அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவங்கள் பல தமிழகத்தில் நடந்திருக்கின்றன. அவ்வாறு இருந்தும் கொஞ்சம் கூட சமூகப் பொறுப்பின்றி ஆழ்துளை கிணற்றை அப்படியே விட்டுவிட்டு செல்பவர்களுக்கு இனிமேல் கருணையை காட்டக்கூடாது. சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்றும் சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
மேலும் ஆயிரம் கோடி 2000 கோடி என கோடிக்கணக்கில் செலவு செய்து செயற்கைக்கோள்களை அனுப்பும் அரசு, இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடைபெறும்போது குழந்தையை மீட்க ஒரு சில கோடிகள் செலவு செய்து ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முடியாதா? ஐஐடி மாணவர்கள் உள்பட பல பி.எச்.டி மாணவர்கள் பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்து பொது மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இதுவரை எந்த ஒரு மாணவர்கள் குழுவாவது ஒரு முயற்சி எடுத்திருந்தால் இந்த மாதிரி நேரத்தில் அது பயன்படும் அல்லவா? என்றும் சமூக வலைதள பயனாளிகள் கூறி வருகின்றனர்
இனிமேலாவது உடனடியாக அரசு அக்கறை எடுத்து ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தால் அந்த குழந்தையை மீட்க தேவையான கருவிகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதை விட முக்கியம் ஆழ்துளை கிணற்றைத் தோண்டி விட்டு அதை மூடாமல் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது