பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் எப்போது வெளிவரும்? தினகரனின் புதிய தகவல்

பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் எப்போது வெளிவரும்? தினகரனின் புதிய தகவல்

பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் தற்போது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலேயே காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும் என்றும், அதன்பின்னர் பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருப்பதால் இதன்முடிவு ஆட்சியையே மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும் அடுத்த ஆட்சியில் அமர்பவர்கள் பொள்ளாச்சி விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டு வருவார்கள் என்றும் தினகரன் பதிலில் இருந்து ஊகிக்க முடிகிறது.

 

Leave a Reply