பொள்ளாச்சி வீடியோக்கள் நீக்கம்: சிபிசிஐடிக்கு யூடியூப் விளக்கம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் ஒரு பக்கம் இளம்பெண்களுக்கு எதிராக நேர்ந்த கொடுமை என்றால் இந்த விவகாரத்தை வியாபாரமாக்கும் வகையில் பலர் இதுகுறித்த வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து அதில் பணம் சம்பாதித்து வந்தனர்.
ந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த வீடியோக்கள் அனைத்தையும் நீக்கும்படி யூடியூப் நிறுவனத்திடம் சிபிசிஐடி கேட்டுக்கொண்டது. இதன்படி கடந்த சில நாட்களாக இதுகுறித்த வீடியோக்களை நீக்கும் பணியில் இருந்த யூடியூப் தற்போது, ‘பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான 90% வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மார்ஃபிங் செய்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே இருப்பதாகவும் சிபிசிஐடிக்கு யூடியூப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
யூடியூபின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.