போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்
அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் செய்ய போவதாக அறிவித்திருந்தனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட இன்று இரவு முதல் லட்சக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர் செல்லவுள்ள நிலையில் திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் இயல்பு பாதிக்கும் என அஞ்சப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சரும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அரசின் வேண்டுகோளை ஏற்று கொண்டதோடு, பொதுமக்களின் நன்மைக்காக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன்