போக்குவரத்து விதியை மீறினால் இனி தப்பிக்க முடியாது? அதிரடி டெக்னாலஜி
சென்னையில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து விதிமீறல் என்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. இந்த நிலையில் அதிகரித்துவரும் போக்குவரத்து விதிமீறல் உள்பட பல குற்றச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தக்கட்ட டெக்னாலஜியாக வாகன நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும் ஏஎன்பிஆர் வகை சிசிடிவி கேமராக்கள் தற்போது பயன்படுத்தப்படவுள்ளது
இந்த நவீன வகை கேமிராக்கள் சென்னை திருமங்கலம் உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்தபின்னர் இனி விதிமீறலில் ஈடுபடுவோர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நவீன சிசிடிவி கேமிரா இன்று சென்னையில் மூன்று சிக்னல்களில் அமைக்கப்பட்டு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனால் தொடங்கிவைக்கப்பட்டது என்றும் விரைவில் சென்னை முழுவதும் இந்த வகை சிசிடிவி கேமிராக்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது