போட்டி போட்டு ஆட்சி அமைக்க முயற்சி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு:

போட்டி போட்டு ஆட்சி அமைக்க முயற்சி: ஜம்மு காஷ்மீர் சட்டசபை கலைப்பு:

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையை அம்மாநில கவர்னர் சத்ய பால் மாலிக் திடீரென நேற்றிரவு கலைத்து உத்தரவிட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதூ.

முன்னாள் முதல்வர் மஹபூபா முப்தியும், பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜத் லோனேவும் ஆட்சியமைக்க போட்டி போட்டு உரிமை கோரியதை அடுத்து சட்டசபை கலைப்பு என்ற அதிரடி நடவடிக்கையை ஆளுனர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோனே தனக்கு ஆதரவாக 45 எம்.எல்.ஏக்களும், மஹபூபா முப்தி தனக்கு ஆதரவாக 56 எம்எல்ஏக்களும் இருப்பதாக கூறினர். ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 89 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இருவரும் தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை கூட்டினால் 101 வருகிறது. எனவே கவர்னர் ஆட்சியை கலைத்ததாக கூறப்படுகிறது.

 

Leave a Reply