போட்றா வெடிய, பிகில் படத்தின் சூப்பர் அப்டேட்!
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயகக்த்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் பிகில் படத்தின் தெலுங்கு மாநில பிசினஸ் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். பிகில் தெலுங்கு ரிலீஸ் உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அந்நிறுவனம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சுமார் 400 திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றாலும் தளபதி படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் அதிக தியேட்டர்கள் ஒதுக்கியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. இந்த செய்தியை கேட்டதும் தெலுங்கு மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் ‘போட்றா வெடியை’ என்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கின்றனர்.