போயஸ் கார்டன் இல்ல ரெய்டு குறித்து தலைவர்கள் கூறியது என்ன?

போயஸ் கார்டன் இல்ல ரெய்டு குறித்து தலைவர்கள் கூறியது என்ன?

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் செய்த ரெய்டுக்கு தினகரன் தரப்பினர் தவிர வேறு யாரும் எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை. வழக்கம்போல் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அமைதி காட்டும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் இந்த விஷயத்திலும் அமைதி காக்கின்றனர். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர்களும் இன்னும் இந்த ரெய்டு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் தினகரன் தரப்பினர் இந்த ரெய்டு குறித்து கூறியதை பார்ப்போம்

டிடிவி தினகரன்: போயஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம். சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உள்ளனர். ஜெ., வீட்டையே சோதனைக்கு உட்படுத்தியதற்கு ஆட்சியாளர்களிடம் என்ன பதில் இருக்கிறது. போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது?’

வி.பி.கலைராஜன்: போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்து போயுள்ளனர்

தீபா: `சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் இல்லம் இருக்கிறது. ரெய்டு குறித்து எனக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியபடுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. என்னிடமும் அனுமதி பெறவில்லை. சசிகலா குடும்பத்திடம் அனுமதி பெற்று இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது’

Leave a Reply