போலீஸ் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு: பொள்ளாச்சி வழக்கு குறித்து திமுக

போலீஸ் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு: பொள்ளாச்சி வழக்கு குறித்து திமுக

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கும்பல் பிடிபட்டுள்ள நிலையில் அந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்து வருவதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது

உண்மையான குற்றாவளிகளை காப்பாற்றவே போலீஸ் முயற்சி செய்வதாகவும், இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு அமைத்து பாலியல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது\

மேலும் பொள்ளாச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. தேர்தலை காரணம் காட்டி திமுக ஆர்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து போராட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply