போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்த் மீண்டும் கைது
சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாய் ஆகிய இருவரையும் படுகொலை செய்து தப்பியோடிய தஷ்வந்தை சமீபத்தில் தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர். பின்னர் அவனை சென்னை கொண்டு வருவதற்காக மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து சென்ற வழியில் திடீரென போலிசாரை தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய தஷ்வந்தை கைது செய்ய மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு மும்பை விரைந்த நிலையில் மும்பை அந்தேரி பகுதியில்ல் பதுங்கி இருந்த தஷ்வந்தை போலீசார் மீண்டும் கைது செய்தனர்
இந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை தகுந்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வர போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பியோடியதால் தஷ்வந்த் மீது இன்னொரு வழக்கும் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.