ப.சிதம்பரம், டிகே சிவகுமார் கைதை தொடர்ந்து மேலும் ஒரு காங்கிரஸ் பிரமுகருக்கு குறி!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரமும், பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் டிகே சிவகுமாரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக் விஜய சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளடு
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தூசி கோத்வாலி காவல்நிலையத்தில் பாஜக நகர பொதுச்செயலாளர் சதீஷ் அரோரா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திக் விஜய சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களை காட்டிலும், முஸ்லிம் அல்லாதவர்களே பாகிஸ்தானுக்காக அதிகம் உளவு பார்க்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று திக் விஜய சிங் கூறியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது