ப.சிதம்பரம் மீதான வழக்கு: தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்

ப.சிதம்பரம் மீதான வழக்கு: தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா தற்போது வாதம் செய்து வருகிறார்.

சிதம்பரத்தை கைது செய்தது இழிவுபடுத்தவே என அபிஷேக் மனு சிங்வி தெரிவித்ததற்கு மறுப்பு தெரிவித்த துஷார் மேத்தா கைது செய்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும்
ஆதாரங்கள் அடிப்படையில், வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதை அறிந்த பின்னரே அவரை கைது செய்ய முடிவு செய்தோம் என்றும் கூறினார்

மேலும் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது, எனவே வழக்கு தொடர்புடைய விபரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்றும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்புடைய ஆவணங்களை அமலாக்கத்துறை வெளிநாடுகளிலிருந்து திரட்டியுள்ளது என்றும், சட்டவிரோத பண பரிவர்த்தனை என்பது ஒரு கிரிமினல் குற்றமே என்றும் துஷார் மேத்தா வாதாடி வருகிறார்

Leave a Reply