மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் யாரும் வரவேண்டாம்: சபரிமலை தேவஸ்ம்போர்டு
மகரவிளக்கு பூஜையின் போது பெண்கள் யாரும் வரவேண்டாம் என சபரிமலை தேவஸ்ம்போர்டு வலியுறுத்தியுள்ளது.
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை சந்திக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் பெண்கள் இன்னும் ஐயப்பனை தரிசிக்க முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது, சபரிமலைக்கு பெண்கள் வரவேண்டாம் என தேவஸம்போர்டு தலைவர் பத்மகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். பெண்களின் வருகையால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உருவாவதாகவும், இது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பத்மகுமார் தெரிவித்தார்.
தேவசம் போர்டின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.