மகளை அடுத்து மகனும் தோல்வி: என்ன ஆச்சு முன்னாள் அதிமுக எம்பி அன்வர்ராஜாவுக்கு?

மகளை அடுத்து மகனும் தோல்வி: என்ன ஆச்சு முன்னாள் அதிமுக எம்பி அன்வர்ராஜாவுக்கு?

அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான அன்வர்ராஜா மகள் அதவியா தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளரிடம் 1,343 வாக்குகள் வித்தியாசத்தில் அதவியா தோல்வி அடைந்தார். ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதவியா போட்டியிட்ட நிலையில் அவர் டெபாசிட் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகனும் தோல்வி அடைந்தார். மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார்.

அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரின் மகன், மகள் ஆகிய இருவரும் தோல்வி அடைந்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply