மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினி: தமிழக அரசு அனுமதிக்குமா?
மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தொடர்ந்த வழக்கில் ஜூன் 11-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன பதில் அளிக்க போகின்றது என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்