மகாத்மா பெயரை தடை கோரிய நபருக்கு நீதிமன்றம் அபராதம்

மகாத்மா பெயரை தடை கோரிய நபருக்கு நீதிமன்றம் அபராதம்

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் மகாத்மா என்ற பெயரை பயன்படுத்த தடைசெய்ய வேண்டும் என்று வழக்கி தொடுத்த நபருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் ரூபாய் நோட்டில் மகாத்மா என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். காந்தியடிகள் தன்னுடைய கைப்பட எழுதிய அனைத்து கடிதங்களிலும் மகாத்மா என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும், எனவே இதன் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும், தபால் தலைகளிலும் மகாத்மா என்ற வார்த்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தின் கீழ் மகாத்மா என பயன்படுத்தப்படுவதாகவும், இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை மனுதாரர் வீண்டிக்கக் கூடாது எனவும் கூறி மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply