மகாராஷ்டிராவில் இன்று 61,695 பேருக்கு கொரோனா: மும்பையில் 8,217 பேர் பாதிப்பு

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 61,695 பாதிக்கப்பட்டுள்ளன்ர், கொரோனா வைரஸிலிருந்து 53,335 பேர் மீண்டுள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 349 பேர் பலியாகி உள்ளனர் என்றும், மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,39,855 என்றும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,59,056 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று 8,217 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 49 பேர் பலியாகி உள்ளதாகவும் 10,097 பேர் குணமாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply