மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் பிரியாணி: சிவசேனா எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் பாகிஸ்தான் பிரியாணி: சிவசேனா எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் பிரியாணி மசாலா விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து, சிவசேனா கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கரின் வாசாய் என்ற பகுதியில் இயங்கி வரும் பிக் பஜார் பல்பொருள் அங்காடியில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பிரியாணி மசாலா பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, அந்த பல்பொருள் அங்காடி முன் குவிந்த சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து உடனே அந்த இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்து அவர்களை சமாதானம் செய்தனர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சிவசேனா கட்சியினர் அறிவித்தனர்

 

Leave a Reply