மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சியா? பெரும் பரபரப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஆதரவு தந்ததால் சமீபத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பாஜக, அந்த ஆட்சியை தக்கவைக்க முடியாமல் திணறியது
நீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலேயே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்ததால், பாஜக, அஜித் பவார் கூட்டணி ஆட்சி திடீரென கவிழ்ந்தது
இந்த நிலையில் டிசம்பர் 1ம் தேதி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் அக்கட்சியிலிருந்து திடீரென விலகி உள்ளார். இதனால் சிவசேனா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ரமேஷ் சோலங்கி தலைமையில் எம்எல்ஏக்கள் ஒரு பிரிவினர் பிரிந்து பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு கொடுப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் சிவசேனா கூட்டணி வைத்ததால்தான் விலகுவதாக கூறும், ரமேஷ் தொடங்கி பாஜக ஆட்சி ஆட்சி அமைய, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முயற்சி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்