மகாராஷ்டிராவில் முதல்வர், துணை முதல்வர் ராஜினாமா?
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது முதல்வர் பட்னாவிஸ் அவர்களும் ராஜினாமா செய்துவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் முதல்வர் ஃபட்னாவிஸ் ராஜினாமா எனத் தகவல் வெளிவந்துள்ளது
ஏற்கன்வே துணை முதல்வார் அஜித் பவார் ராஜினாமா செய்த நிலையில், பிற்பகல் 3.30க்கு முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சிவசேனா கூட்டணிக்கு 162 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதல்வர், துணை முதல்வர் ராஜினாமா என தகவல்