மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்!
தேர்தலில் போட்டியிடுபவர்களில் கோடீஸ்வரர்கள் எத்தனை பேர், அவர்கள் யார் யார்? என்பது கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் வந்துவிட்டது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள் யார் யார்? என்பதி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இதோ அதுகுறித்த ஒரு பட்டியல்
ஏழை வேட்பாளர்கள் பெயர், கட்சி, சொத்து மதிப்பு:
1. சிவரஞ்சனி (நாம் தமிழர் கட்சி) காஞ்சிபுரம் தொகுதி ரூ. 15,000.
2. மதிவாணன் (நாம் தமிழர் கட்சியை) தென்காசி தொகுதி – ரூ 21,000 .
3. மாலதி (நாம் தமிழர் கட்சி) நாகப்பட்டினம் தொகுதி – ரூ.1.19 லட்சம்
4. அன்பின் பொய்யாமொழி ( மக்கள் நீதி மய்யம்) விழுப்புரம் தொகுதி- ரூ.1.22 லட்சம்.
5. பாண்டியம்மாள் (நாம் தமிழர் கட்சி) மதுரை தொகுதி – ரூ.1.5 லட்சம்
6. வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி) திருவள்ளூர் தொகுதி – ரூ.3.10 லட்சம்.
7. சாந்தி (நாம் தமிழர் கட்சி) பெரம்பலூர் தொகுதி- ரூ 1.11 லட்சம்.
8. சுபாஷினி (நாம் தமிழர் கட்சி) மயிலாடுதுறை தொகுதி – ரூ 5.25 லட்சம்.
9. சனுஜா (நாம் தமிழர் கட்சி) பொள்ளாச்சி தொகுதி – ரூ 5.5 லட்சம்.
10. சித்ரா (நாம் தமிழர் கட்சி) கடலூர் தொகுதி – ரூ.6.40 லட்சம்.
11. தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி) வேலூர் தொகுதி – ரூ.6.58 லட்சம்.
12. சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) மதுரை தொகுதி – ரூ.7.7 லட்சம்.
13. புவனேஷ்வரி (நாம் தமிழர் கட்சி) ராமநாதபுரம் தொகுதி – ரூ.7 .93 லட்சம்.
14. செங்கொடி (அமமுக) நாகப்பட்டினம் தொகுதி – ரூ. 8.33 லட்சம்.
15. கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி) கோவை தொகுதி – ரூ.8.55 லட்சம்.
16. மணிமேகலை (நாம் தமிழர் கட்சி) நீலகிரி தொகுதி – ரூ.9. 02 லட்சம்.
17. காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) வட சென்னை தொகுதி – ரூ.9.17 லட்சம்.
18. எம். சிவஜோதி (நாம் தமிழர் கட்சி) சிதம்பரம் தொகுதி – ரூ 10.37 லட்சம்.
19. முனீஸ்வரன் (மக்கள் நீதி மையம்) தென்காசி தொகுதி – ரூ.10.96 லட்சம்.
20. பிரகலதா (நாம் தமிழர் கட்சி) விழுப்புரம் தொகுதி – ரூ.12.53 லட்சம்.
21. ருக்மணி தேவி (நாம் தமிழர் கட்சி) தருமபுரி தொகுதி – ரூ.13.7 8 லட்சம்
22. வடிவேல் ராவணன் (பாமக) விழுப்புரம் தொகுதி –ரூ. 19.25 லட்சம்.
23. ஸ்ரீ காருண்யா சுப்பிரமணியம் (மக்கள் நீதி மய்யம்) கிருஷ்ணகிரி தொகுதி – ரூ. 20.1 லட்சம்
24. அருள் (மக்கள் நீதி மய்யம்) திருவண்ணாமலை தொகுதி – ரூ.20.4 லட்சம்
25. தெகலான் பாகவி (எஸ்டிபிஐ) மத்திய சென்னை தொகுதி – ரூ.21.73 லட்சம்
26. விஜயபாஸ்கர் (மக்கள் நீதி மய்யம்) ராமநாதபுரம் தொகுதி- ரூ. 26.36 லட்சம்
27. பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்) சேலம் தொகுதி –ரூ. 27.5 லட்சம்
28. ரவி (மக்கள் நீதி மய்யம்) சிதம்பரம் தொகுதி- ரூ. 28.54 லட்சம்
29. தமிழரசி (நாம் தமிழர் கட்சி) ஆரணி தொகுதி – ரூ. 29.33 லட்சம்
30. ஏ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர் கட்சி) தென் சென்னை தொகுதி – ரூ. 34.66 லட்சம்
31. பாவேந்தன் (நாம் தமிழர் கட்சி) அரக்கோணம் தொகுதி – ரூ. 35.20 லட்சம்