மக்களவை தேர்தல் எதிரொலி: வேலூரில் ஜூலை 24ஆம் தேதி விடுமுறை
வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளடு.
வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இதனையடுத்து இந்த பயிற்சிக்காக வேலூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.