கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்கள் என்றே கூறவேண்டும்
பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் தவிர மற்ற அனைத்தும் திறக்கப்பட்டு விட்டன என்பதால் மக்கள் நடமாட்டம் தற்போது மிக அதிகமாக உள்ளது
இதுகுறித்து பிக் பாஸ் போட்டியாளர் நடிகருமான ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டரில் கூறும்போது கொரோனா பயம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடமிருந்து விலகி இயல்பான வாழ்க்கையை தொடங்கி விட்டனர் இது ஒரு நல்ல அறிகுறிதான்
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தயவுசெய்து ஒவ்வொருவரும் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
The corona-fear is slowing down & ppl have started working/doing their routine to an extent.. its really good but can’t deny the fact that the numbers are peaking everyday. So please be safe & take care everyone ❤️
— Harish Kalyan (@iamharishkalyan) September 10, 2020