மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு! காரணம் என்ன?

மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு! காரணம் என்ன?

கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், அதன் பின்னர் உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் உயர்நிலைக்குழு இன்று திடீரென கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக செயற்குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்கள் நியமனம செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவராக திரு.ஞானசம்பந்தன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு. அருணாச்சலம் அவர்களும், பொருளாளராக திரு.சுரேஷ் என்பவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

ஒருசில மாதங்களில் உயர்நிலைக்குழு கலைப்பு ஏன் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை

Leave a Reply