மக்காசோள ரவை கிச்சடி

ravaiதேவையான பொருட்கள் :

மக்காசோள ரவை –  1 கப்
காய்கள் – ஒரு கப் (பட்டாணி, கேரட், உருளைகிழங்கு, பீன்ஸ்)
வெங்காயம் – 2
சிறிய தக்காளி – ஒன்று
இஞ்சி _ ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் – 5
எலுமிச்சம்பழ ஜூஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிது
மஞ்சள் தூள் – கால் சிட்டிகை
தண்ணீர் – இரண்டரை கப்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை :

* காய்கறிகள், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி தண்ணீர் சேர்க்கவும்.

* தண்ணீர் கொதிவந்தவுடன் எலுமிச்சம்பழ ஜூஸ், உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை தூவியது போல் கொட்டி கிளறவும்.

* வாணலியை மூடி 15 நிமிடம் மிக குறைந்த தணலில் வேகவிடவும்.

* இடையில் ஒரு முறை கிளறிவிடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி தேங்காய் சட்னி, பீர்க்கங்காய் பச்சடியுடன் பரிமாறவும்.

* மக்கா சோள ரவை வேக சிறிது நேரம் எடுக்கும், குழைய வேண்டுபவர்கள் இன்னும் அரைகப் தண்ணீர் அதிகம் சேர்க்கலாம்.

Leave a Reply