மதம் பிடித்த யானை தூக்கி போட்டு மிதித்து இருவர் பலி: பெரும் பரபரப்பு
அமைதியான விலங்கு என்று கருதப்படும் யானைக்கு மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்பது அதற்கே தெரியாத அளவுக்கு விபரீதம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்று மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அந்த யானை பிசியான தெரு ஒன்றில் ஓடி அனைவரையும் பயமுறுத்தியது.
இதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை அந்த யானை தூக்கிப்போட்டு மிதித்ததால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட உடன் அவர்கள் உடனடியாக வந்து மதம் பிடித்த யானையை யானைப்பாகன் உதவியுடன் அடக்கி அந்த யானையை காட்டுக்குள் அனுப்பி வைத்தனர்
ஊருக்குள் புகுந்த மதம் பிடித்த யானை திடீரென அப்பகுதி மக்களை பயமுறுத்தியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது