மதுபானம் வாங்க ஆதார் அட்டை! ஐகோர்ட் யோசனையால் குடிமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என தமிழக அரசு கொள்கை வடிவில் முடிவெடுத்திருந்தாலும் அதில் இருந்து கிடைத்து வரும் வருமானம் காரணமாக டாஸ்மாக் கடைகளை குறைக்க தயங்கி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வரும் நிலையில் இன்றைய விசாரணையின்போது, ‘மதுபானம் வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்க கூடாது? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஆதார் அட்டையுடன் வந்தால்தான் மதுபானம் என்ற நிலை ஏற்பட்டால் பலரால் மதுபானம் வாங்க முடியாத நிலை ஏற்படும். அதனால் குடிப்பழக்கம் குறையும் என்பதே இந்த கேள்வியின் நோக்கம். இதற்கு தமிழக அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்