மதுமிதா மீது சென்னை போலீஸ் நிலையத்தில் புகார்
நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் சென்னை கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளது
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் சர்ச்சைக்குரிய ஒரு செயலில் ஈடுபட்டதால் மதுமிதா அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து மதுமிதா ஒருசில ஊடகங்களில் பேட்டி அளித்து வந்த நிலையில் இன்று அவர் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
இந்த மனுமீது காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்