மதுரையில் ஏப்ரல் 18ல் தான் தேர்தல்: ஆட்சியர் பேச்சால் அதிருப்தியான அனைத்து கட்சி தலைவர்கள்

மதுரையில் ஏப்ரல் 18ல் தான் தேர்தல்: ஆட்சியர் பேச்சால் அதிருப்தியான அனைத்து கட்சி தலைவர்கள்

ஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் சித்திரை பெருவிழா கொண்டாடப்படுவதால் அன்றைய தேதியில் தேர்தல் நடத்த கூடாது என அனைத்து கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றை மதுரை ஆட்சியர் நடராஜன் கூட்டினார். இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையின்போது சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்கும் ஏப்.18ல் தேர்தல் நடத்த அனைத்துக்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

ஆனால் கூட்டத்தின் முடிவில் திட்டமிட்டபடி ஏப்.18ல் தேர்தல் நடக்கும் என ஆட்சியர் கூறியதற்கு அனைத்துக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டத்தின் பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply