மதுரை எய்ம்ஸ்க்கு ஒப்புதல்: நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக மக்களின் கனவு திட்டங்களில் ஒன்றான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இன்று நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அம்மா பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் தலைமையிலான நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. தமிழக மக்களின் கோரிக்கையின்படி எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என அந்த தீர்மானித்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கியிருந்தாலும் வரும் பட்ஜெட்டில்தான் நிதி ஒதுக்கும். ஆனால் வரும் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் அரசுதான் நிதி ஒதுக்க வேண்டிய நிலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.