மதுரை ஐகோர்ட்டில் தினகரன் கொடுத்த மனு எதற்கு தெரியுமா?

மதுரை ஐகோர்ட்டில் தினகரன் கொடுத்த மனு எதற்கு தெரியுமா?

சமீபத்தில் கூடிய அதிமுக பொதுகுழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த குறி தினகரனுக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவை போலவே தினகரனையும் சிறைக்கு அனுப்பிவிட்டால் கட்சி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று பாஜக-அதிமுக முடிவு செய்திருப்பதாகவும், இதனையடுத்து அவர் மீதான வழக்குகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினகரன் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டே உள்ளார். இன்று அவர் விடுத்த செய்திக்குறிப்பு ஒன்றில், ‘அமைப்புச்செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய் சுந்தரம் விடுவிப்பு, எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழ்மகன் உசேன் விடுவிப்பு என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருச்சி உழவர் சந்தை பகுதியில் வரும் 19ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி, தினகரன் அணி சார்பில் மதுரை ஐகோர்ட்டி மனு அளித்திருப்பதாகவும் தகவல்..

Leave a Reply