மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பறந்த பாகிஸ்தான் தேசிய கொடி. பெரும் பரபரப்பு.

hacked

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவற்றின் இணையதளங்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஹேக் செய்துள்ளனர். இந்த இரண்டு இணையதளங்களிலும் பாகிஸ்தான் தேசிய கொடி பறப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரின் புகழ்வாய்ந்த சரஸ்வதி நூலகத்தின் அதிகாரபூர்வ இணையதளம்  www.tmssmlibrary.in ஆகும். இந்த இணையதளம் இன்று காலை ஹேக் செய்யப்பட்டது. சில நிமிடங்களில் இந்த இணையதளத்தில் பாகிஸ்தான் கொடி இருப்பதை பார்த்து நூலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதளமும் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர். கமிஷனர் சஞ்சய் மாத்துார் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் வசிக்கும் அப்சல் என்பவர் இணையதளத்தை முடக்கியது தெரிந்துள்ளது.

Leave a Reply