மத்திய அரசின் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த பில்கேட்ஸ்
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ள செய்தி மத்திய அரசு வட்டாரங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது
சமீபத்தில் மத்திய அரசு 50 கோடி மக்கள் பயனடையும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்ற பெயரை கொண்ட திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது
இந்த நிலையில் இந்த திட்டம் கு|றித்து மைரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 லட்சத்து 85 ஆயிரம் பேர் இத்திட்டத்தால் பயன் அடைந்திருப்பதாகவும், இதற்காக இந்திய அரசுக்கு வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.
Congratulations to the Indian government on the first 100 days of @AyushmanNHA. It’s great to see how many people have been reached by the program so far. @PMOIndia https://t.co/AHHktUt95z
— Bill Gates (@BillGates) January 17, 2019