மத்திய அரசின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்
2019-2020ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்
தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை ஆண்டுக்கு ஊதியம் பெறுபவர்கள் எந்தவிதமான வருமானவரி செலுத்த வேண்டியத் தேவையில்லை.
தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.6.50 லட்சம் வரை இருப்பவர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.6.50 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள், பிஎப், பங்குவர்த்தகம், பரஸ்பர நிதித்திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்தால் வருமானவரி செலுத்தத் தேவையில்லை.
நிரந்தர கழிவுத் தொகை விலக்கு ரூ.40 ஆயிரமாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் இது, ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் நிலையங்களில் டெபாசிட் செய்திருப்பவர்கள், வங்கியில் இருந்து டெபாசிட் மூலம் வட்டிவருமானம் பெறுபவர்கள் நிரந்தரக் கழிவு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
80சி மூலம் கழிவு பெறுவது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் வட்டியாக ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் செலுத்திவருபவர்கள் கழிவு பெறுவது ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வாடகையில் இருந்து பெறும் வரிச்சலுகை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் 3 கோடி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த வரி செலுத்துவோர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது