மத்திய அரசு மீது தமிழக தலைமைச்செயலாளர் குற்றச்சாட்டு: பெரும் பரபரப்பு
தமிழகம் சந்தித்த அனைத்து பேரிடர்களும் சிறந்த அனுபவங்களை கொடுத்துள்ளன என்றும் குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் நீண்டகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவைத்துள்ளதாகவும், சென்னையில் புயல் மற்றும் நகர்ப்புற வெள்ளம் என்ற கருத்தரங்கில் தலைமைச்செயலாளர் சண்முகம் பேசினார்
மேலும் பேரிடர் காலங்களில் மத்திய அரசு செய்யக்கூடிய உதவி போதுமானதாக இருப்பதில்லை என்றும், மாநில அரசு எதிர்ப்பார்க்கக்கூடிய உதவிகளையும் மத்திய் அரசு செய்வதில்லை என்றும், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.
இதுவரை அரசியல்வாதிகள் மட்டுமே மத்திய அரசை குற்றங்கூறி வரும் நிலையில் தற்போது உயரதிகாரி ஒருவரும் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது