மத்திய அரசை திடீரென ஆதரிக்கும் தம்பிதுரை! பல்டிக்கு காரணம் என்ன?
கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும் பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த அதிமுக எம்பி தம்பிதுரை தற்போது திடீரென மத்திய அரசை புகழ்ந்துள்ளார்.
நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சாமி தரிசனம் செய்த தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘மத்திய அரசு மூலம் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு மேலும் பல உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தம்பிதுரையின் தொகுதியான கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை போட்டியிட விருப்பமனு கேட்டிருந்த நிலையில் திடீரென தம்பிதுரை மத்திய அரசின் மீதான விமர்சனத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது