மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு: தஞ்சை அருகே பரபரப்பு
சமீபத்தில் கஜா புயல் தஞ்சை, திருவாரூர் உள்பட டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்த நிலையில் அந்த பகுதி மக்களில் பலர் அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இன்னும் கிராமப்புற பகுதிகளுக்கு நிவாரண உதவியும், மின்சாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கஜா புயல் குறித்த சேதங்களை பார்வையிட டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் தமிழகம் வந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை அருகே ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது