மனம் தளர்ந்து விடாதீர்கள் ஐயா! இஸ்ரோ சிவனுக்கு 6ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம்

மனம் தளர்ந்து விடாதீர்கள் ஐயா! இஸ்ரோ சிவனுக்கு 6ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதம்

சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பி உலகப்புகழ் பெற்ற தமிழரான இஸ்ரோ சிவனுக்கு, உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விக்ரம் லேண்டரின் நிலை என்ன? என்று தெரியவில்லை என்றாலும், அவருக்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவி நதியா என்ற சிறுமி டுவிட்டரில் இஸ்ரோ சிவன் அவர்களுக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சந்திரியான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான். சந்திரியான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என்றும், பின்பு விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன். ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்

பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரியான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள். இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும், எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.

விக்ரம் லேண்டருக்கு எந்த விதம் சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான். முயற்சி திருவினையாக்கும். கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம்”. இவ்வாறு அந்த சிறுமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply