மனித நேயம் அறக்கட்டளையில் ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி
நுழை வுத்தேர்வு நடைபெறும். இத்தேர் வுக்கான வினாக்கள் பொது அறிவு சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
இலவச பயிற்சிக்கான மாணவர் தேர்வில் மாவட்ட வாரியாக ஒதுக் கீடு உண்டு. எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமலேயே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவர்களும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகும்.
இலவச பயிற்சிக்கான நுழை வுத்தேர்வு எழுத விரும்புவோர் www.saidais.com என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே ஆன்லைன் பயிற்சிக்கு விண்ணப் பித்தவர்கள் நுழைவுத்தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 21-ம் தேதி ஆகும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அந்த அனுமதிச்சீட்டில் பாஸ் போர்ட் அளவுள்ள புகைப்படத்தை ஒட்டி, அதில் அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அவ்வாறு சான்றொப்பம் பெற முடியாதவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை அனுமதிச்சீட்டுடன் கொண்டுவர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-24358373 என்ற தொலைபேசி எண்ணிலோ, 98401-06162 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது www.saidais.com என்ற இணையதள முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.