மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை..

மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை..

வாழுறதுக்கு ஏத்த சூழல்ல மனை இருக்கானு பார்க்கவேண்டியது அடிப்படையான விஷயம். அதேமாதிரி, மனை மேடான இடத்தில் இருக்கானு பாருங்க. லேசா நாலு தூறல் போட்டதுமே குளம் மாதிரி தண்ணி தேங்குற இடத்தை வாங்கிட்டு, அப்புறம் வீடு கட்டும்போது அல்லாடக் கூடாது.

அதேமாதிரி, லே அவுட் போட்டு மொத்தமா மனை கிடக்கும்போது நல்ல கார்னர் இடமா கிடைக்குமானு பாருங்க… அதேபோல, அந்த லே அவுட்டின் மூலையிலே முட்டுச் சந்திலே வாங்காம, கொஞ்சம் மெயின் ரோடு பக்கமா இருக்கற மனையைத் தேர்ந்தெடுங்க. வீடுகட்டிக் குடிபோனாலும் மீதியிருக்கும் இடத்துல கடை கட்டுனா, ஒரு வருமானமாவது வரும். வீடு கட்டலைன்னாலும் எதிர்காலத்துல மத்த மனையைவிட நல்ல விலைக்கு விக்கமுடியும்.

மெயின் ரோட்டுக்குப் பக்கமா வாங்கும்போது ஒரு விஷயத்தை நல்லா கவனிச்-சுக்கணும். எதிர்-காலத்தில் ரோட்டை அகலப்படுத்தப் போறோம்… பஸ் விடப் போறோம்னு சொல்லி, மனையை அரசாங்கம் எடுத்துக்கற அபாயம் இருக்கானும் பார்த்துக்கணும்.

மனையோட அளவு முக்கியம்!

நம்ம தகுதிக்குத் தகுந்த மாதிரிதானே மனையை வாங்கப் போறோம். இதிலே அளவு பத்தி கவலைப்பட என்ன இருக்குனு யோசிக்கலாம். அதிகபட்சமா நீங்க வாங்கப் போற அளவைப் பத்தி கவலையில்லை. ஆனா, குறைந்தபட்சமா நீங்க வாங்கறதுக்குனு ஓர் அளவு இருக்கு. அந்த அளவுக்குக் கீழே போனா, உள்ளாட்சி அமைப்பு வீடு கட்ட அங்கீகாரம் கொடுக்காது. அந்த அங்கீகாரம் இல்லைன்னா, அந்த மனையில் எதுவுமே செய்யமுடியாது. நீங்க வாங்கப்போற மனை மாநகராட்சியிலோ, நகராட்சியிலோ இருந்தா 900 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். கிராமப் பஞ்சாயத்துன்னா 600 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். அப்போதான் லே அவுட் அப்ரூவல் கிடைக்கும்.

அதேமாதிரி மனையை மட்டும் பாத்தாப் போதாது. அதுக்குப் போகும் முக்கியமான ரோடு எவ்வளவு அகலம் இருக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. மாநகராட்சின்னா 24 அடி, நகராட்சின்னா 23 அடி இருக்கணும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும். அதனால, லே அவுட்டில் மனையை செலக்ட் பண்ணும்போதே இந்த ரோடு விஷயத்தையும் கவனமாப் பார்த்துக்கணும்.

வீட்டுக் கடன் வாங்கவோ, வீட்டுப் பத்திரத்தை வெச்சு பேங்க்கில் அடமானக் கடன் வாங்கவோ போகும்போது, முதல்ல கேட்கும் விஷயம் இந்த லே அவுட் அங்கீகாரம்தான். அதனால, இதை அலட்சியப்படுத்திடாதீங்க. அதேமாதிரி, கூடுமானவரைக்கும் சதுரமாவோ, செவ்வகமாவோ இருக்கற மனையை செலக்ட் பண்ணுங்க. ஒருபக்கம் கோணலா இருந்தா, அந்த இடம் கட்டடம் கட்டும்போது வீணாக் கிடக்கும். வாங்கின இடத்தை முழுமையா பயன்படுத்த முடியாமப் போயிடும்.

Leave a Reply